Ava-and-Thava-Criminals-Gropes-01

ஆவா மற்றும் தவா குழு தலைவர்கள் பாதுகாப்பாக படைமுகாம்களுள்!

யாழ்.குடாநாட்டில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக இலங்கை அரச காவல்துறை தேடிக்கொண்டிருக்கும் தெருசண்டியர் குழுக்களது தலைவர்கள் இராணுவ முகாம்களுள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.அண்மையினில் யாழ் நல்லூர் அரசடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட கண்காணிப்புக் கமராவின் காட்சிகள் வெளி வந்ததே அந்தச் சம்பவத்தின் தோற்றப்பாட்டை எடுத்துக் காட்டியது.Ava and Thava Criminals Gropes 01

எனினும் அந்த காணொலியை கசிய விட்டதன் பின்னணினில் இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் உள்ளமை அம்பலமாகியுள்ளது.தமக்கு நெருக்கமான உறவை கொண்டுள்ள சில ஊடகவியலாளர்கள் ஊடாக அவ்வாறு காணொலியை கசிய விடுவதன் மூலம் இராணுவத்தின் சேவை தொடர்ந்தும் வடக்கினில் தேவையென்பதை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.Ava and Thava Criminals Gropes 02

ஏற்கனவே குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஆவா குழு,தவா குழுவென பல பற்றி கொழும்பினில் அமைச்சர்கள் ஈறாக பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்திக்கொண்டிருக்க அக்குழுக்களை தேடிக்கொண்டிருப்பதாக காவல்துறை இன்னொரு புறம் பிரச்சாரங்களை மேற்கொண்டும் வருகின்றது.Ava and Thava Criminals Gropes 03

இந்நிலையினில் தேடப்படும் இக்குழுக்களது தலைவர்கள் படைமுகாம்களினில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு;ள்ளமை அம்பலமாகியுள்ளது.Ava and Thava Criminals Gropes 04
வன்னியினில் படையினரால் மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியொன்று தற்போது மன்னாரிலுள்ள படை முகாமொன்றினில் வளர்க்கப்பட்டுருகின்றது.இந்நிலையினில் அம்முகாம்களுள் பதுங்கியுள்ள அல்லது விருந்தினராக வந்து செல்கின்ற முக்கிய தேடப்படும் குற்றவாளிகள் குறித்த சிறுத்தை குட்டியுடன் விளையாடும் புகைப்படமே இதுவாகும்.

யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடக்கினில் படைக்குறைப்பு பற்றி தமிழ் தரப்புக்கள் கோரிவருகின்ற நிலையினில் சர்வதேச நாடுகளும் இதன் நியாயத்தன்மையினை ஏற்றுக்கொண்டு வருகின்றன.

ஆனால் அரசோ படைக்குறைப்பினை விரும்பியிராத நிலையினில் அதனை நியாயப்படுத்த புலிகள் மீள் எழுச்சி மற்றும் இத்தகைய குழுக்களது செயற்பாடுகளை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது.அதற்கேற்ப ஒருபுறம் முன்னாள் போராளிகளை கைது செய்து சிறைகளினில் அடைத்துவருவதுடன் இன்னொரு புறம் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களினை தேடுவதாகவும் காண்பிக்கப்பட்டுவருகின்றது.அவ்வாறாக தேடப்படுவதாக காண்பிக்கப்படும் பிரதான குற்றவாளிகளை மறுபுறம் படைமுகாம்களுள் பதுக்கி வைத்துள்ளமையே தற்போது அம்பலமாகியுள்ளது.
வாள் வெட்டுக்குழுக்களிலுள்ளவர்களிடையே புழங்கும் நிதி மற்றும் பயன்பாட்டிலுள்ள அதிவலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள் கூட ஒருபுறம் புலம்பெயர் சொந்த பந்தங்களிடமிருந்தும் மறுபுறம் பாதுகாப்பு அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டினில் வழங்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.