Vidya-Bati-Protest-9

ஹர்த்தால் இல்லை! வதந்திகளை நம்ப வேண்டாம்.

வழமை போன்று அனைத்துச் செயற்பாடுகளும் இடம்பெறும். வாந்திகளை நம்ப வேண்டாம்: வடமாகாண பொது அமைப்புக்களின் ஒன்றியம்.

வடமாகாணத்தில் நாளைய தினம் கடையடைப்பு ஹர்த்தால் என சிலரால் திட்டமிட்ட வாந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அதனை நம்ப வேண்டாம் எனவும் வழமை போன்று வடமாகாணத்தினது செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறும் வடமாகாண பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

வடமாகாணசபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், முதலமைச்சர் மீதான அதிருப்தி ஆகியவற்றைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு விதமான குழப்பமான சூழ்நிலை காணப்படுகின்றது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிலரால் திட்டமிட்ட வகையில்  வடமாகாணத்தில் கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெறவுள்ளதாகவும் அதனால் வடமாகாணத்தின் பாடசாலைகள் இயங்கமாட்டாது எனவும் போக்குவரத்து உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் கூறி மக்களைக் குழப்பும் வகையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடமாகாணத்தில் ஹர்தாலோ கடையடைப்போ எதுவும் கடைப்பிடிக்கப்படாது எனவும் வடமாகாணத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் வழமை போன்று நடைபெறும் மக்களைக் குழம்ப வேண்டாம் என வடமாகாண பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விக்கியின் தலைமையில் அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: மல்லாகம் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து..