யாழின் ஆணழகன் நீர்வேலி மைந்தன்

வடமாகாண முதலாவது ஆணழகன் போட்டி யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் உடற்திறன் விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன் தினம் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியானது போர் காலத்தின் பின்னர் சட்டபூர்வமான முறையில் முதன் முறையாக வடமாகாணத்தில் அங்கீகாரம் பெற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் அதிகளவான இளைஞர்கள் ஆர்வத்துன் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன் போது பல்வேறு நிறை தொடர்பாக போட்டிகள் நடைபெற்றதுடன் பல இளைஞர்கள் தங்களது உடற்கட்டமைப்பினை வெளிக்காட்டி சிறந்த பெறுபேறுகளை குறித்த போட்டிகளில் பெற்றுக்கொண்டனர்

இதில் 50 கிலோ எடை தொடக்கம் 85 கிலோ எடை வரையுள்ளவர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் இடம்பெற்றன.

தொடர்ந்து அப் பிரிவுகளிலும் முதலிடங்களை பெற்றவர்களுக்கு சம்பியன் போட்டி இடம்பெற்ற நிலையில் இறுதியாக வடமாகாணத்தின் சிறந்த ஆண் அழகானகாக சி. தயாநிசான் தெரிவானார். இரண்டாவதாக சிவலிஙங்கம் சுரேகன் மற்றும் மூன்றாவதாக செல்வகுமாரன்(சிறி) கோகுலராசன் ஆகியோர் தெரிவாகினர்.

அத்துடன் இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இப்போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இலங்கை உடற்கட்டமைப்பு மற்றும் உடற்திறன் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டி.என். வீரதுங்க அதன் யாழ் மாவட்ட அனுசரணையாளர் ஏ.ஜெயகிரிசாந் யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தின் செயலாளர் ஜெ.துஷியந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளும் இங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ana1 ana12 ana122