police-in-sri-lanka

வவுனியாவில் கோஸ்டி மோதல்

வவுனியா கோவில்புதுக்குளத்தில் 30-06-2017 இரவு 11.00 மணிக்கு நடைபெற்ற கோஸ்டி மோதலொன்றின்போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் எஸ்.ரஜீவ்காந் (சூப்பி) வயது 32 எனும் குடும்பஸ்தர் ஆவார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கோவில்புதுக்குளம் சந்தியில் நின்ற இரண்டு பேருக்கும் வீதியில் பயணித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் குறிப்பிட்ட நபர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வவுனியா தமிழ்மொழிமூல அவசர பொலிஸ் சேவைக்கு (0766224949) தகவல் வழங்கியபோதும் வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருக்கவில்லை.

இதேவேளை, வவுனியாவில் தமிழில் அழைத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கையில் செயற்படும் ஒரேயொரு தமிழ் மொழிமூல பொலிஸ் அவசர சேவை என விளம்பரப்படுத்தியுள்ள போதும் முறைப்பாட்டுப் பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.