BUTEKA001

யாழ்ப்பாணம் தொடர்பில் பகீர் தகவல் வெளியிட்ட தென்னிலங்கை எம்.பி

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ‘ஹெரோயின் ரொபி’ விற்கப்படுகின்றது.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம், புத்திக பத்திரண கேள்வி எழுப்பி யிருந்தார்.

‘பிரபல பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பியர் நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றனவா? பாடசாலை மாணவர்கள் இதன்மூலம் போதைப் பொருள் பாவனைக்குத் தூண்டப்படுகின்றார்கள் என்பதைக் கல்வி அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?’ என்றும் கேள்வி முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ், அனுசரணை வழங்குவதற்கு அவ்வாறான நிறுவ னங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று பதிலளித்தார்.

புத்திக பத்திரண, பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்துக்குள் இல்லாவிட்டாலும், போட்டிகள் நடைபெறுகின்ற பாடசாலைகளுடன் இணைந்த மைதானங்களுக்கு, மிகவும் அண்மையில் இவ்வாறு பியர் விற்பனை செய்யப்படுகின்றது.

பியரில் ஆரம்பிப்பதுதான், இறுதியில் செறிவுகூடிய மது பானத்தைப் பருகும்வரை செல்லும். பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைளை நிறுத்தவேண்டும்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த 50 ரொபிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுவும் மாணவர்களை இலக்குவைத்தே முன்னெ டுக்கப்படுகின்றது, என்று குறிப்பிட்டார்.

இவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – –என்றார்.