lengam

இர­வோ­டி­ர­வாக திடீ­ரென வந்­த­மர்ந்த சிவ­லிங்­கம் பொன்­னா­லை­யில் பர­ப­ரப்பு

யாழ்ப்­பா­ணம், பொன்­னா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் இர­வோடு இர­வாக சிவ­லிங்­கம் ஒன்று திடீ­ரென முளைத்­துள்­ளது.

ஈழத்­துச் சிதம்­ப­ரம் என வர்­ணிக்­கப்­ப­டும் காரை­ந­கர் சிவன் கோயி­லின் தேர்த் திரு­வி­ழா­வான நேற்­றுக் காலை­யில் சிவ­லிங்­கம் தோன்­றி­ய­தால் மக்­கள் மத்­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

வீதி­யால் சென்­ற­வர்­கள் சிவ­லிங்­கத்­தைக் கண்டு இறங்­கிச் சென்று வழி­பட ஆரம்­பித்­த­னர்.

பொன்­னா­லைச் சந்­திக்கு அரு­கா­மை­யில் வெட்­ட­வெ­ளி­யில் இந்­தச் சிவ­லிங்­கம் தோன்­றி­யுள்­ளது. சுமார் நான்­கரை அடி உய­ர­மா­னது இந்­தச் சிவ­லிங்­கம். இர­வோடு இர­வாக வாக­னத்­தில் கொண்­டு­வ­ரப்­பட்டு அது அங்கு வைக்­கப்­பட்­ட­தற்­கான அடை­யா­ளங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

குடி­தண்­ணீர் வினி­யோ­கத்­துக்­கா­கப் பொன்­னாலை வீதி­யின் கரையே குழாய்­கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றன. குழாய் தாக்­கப்­ப­டு­வ­தற்­காக வெட்­டப்­பட்டு குழி­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட கற்­கள், மணல் என்­ப­வற்றை அள்ளி ஓர் இடத்­தில் குவித்­து­விட்டு அதன் மேல் சிவ­லிங்­கம் வைக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று புது­வ­ரு­டப்­பி­றப்பு தின­மா­கும், ஈழத்­துச் சிதம்­ப­ரம் என்று வர்­ணிக்­கப்­ப­டும் காரை­ந­கர் சிவன் கோவில் தேர்த் திரு­வி­ழா­வும் நேற்று இடம்­பெற்­றது.

இத­னால் அதி­க­மான பக்­தர்­கள் அந்த வீதி­யால் சிதம்­ப­ரத்­துக்­குச் சென்­ற­னர். திடீ­ரென முளைத்­தி­ருந்த சிவ­லிங்­கத்தை ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்­தது மட்­டு­மன்றி இறங்கி வணங்­கி­யும் சென்­ற­னர்.

வடக்­கின் பல பகு­தி­க­ளி­லும் திடீர் திடீ­ரென புத்­தர் சிலை­களே நிறு­வப்­பட்டு வரும் நிலை­யில் புது­வி­த­மாக வெட்­ட­வெ­ளி­யில் காட்டு வெயி­லுக்­குள் சிவ­லிங்­கம் வைக்­கப்­பட்­டுள்­ளது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது என்று அங்கு வந்த சிலர் பேசிக் கொண்­ட­னர்.