பழிவாங்க புறப்படுகின்றார் வடமாகாண ஆளுநர்?

பழிவாங்க புறப்படுகின்றார் வடமாகாண ஆளுநர்? யாழில் களமிறக்கப்பட்டிருக்கும் சிவராசா சிவகுலன் (முரளி )

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் முகவராக செயற்படுபவரும் முரளி எனப்படும் 30 வயதான சிவராசா சிவகுலன் எனும் நபர் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அரச ஊழியர்கள்,சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் தமிழ் பத்திரிகையாளர்கள், மற்றும் சமூக நலன்சார்ந்த செயற்பாடுகளினில் ஈடுபட்டுவருபவர்களை சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் மூலம் பழிவாங்க முற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அவர்களை தண்டிப்பதற்காக ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அரச ஊழியர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்பான விவரங்களை அவர்களிடம் கையளித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் ஈபிஆர்எல்எவ் பிரிவின் துணை இராணுவப்பணியாளரான இவர் தற்போது ஆளுநரது முகவராக செயற்பட்டுவருகின்றார்.

இதனிடையே சமூக செயற்பாடுகளினில் ஈடுபட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்களினில் அரச சேவையிலுள்ளவர்களை வடபகுதிக்கு வெளியே அனுப்பிவைக்கும் வகையினில் இடமாற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நடவடிக்கைகள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் பாதுகாப்பு பொறுப்பான பாதுகாப்புப்பிரிவு அதிகாரி மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முரளி எனும் நபர் வடமாகாணசபை தேர்தல் 2013 இனில் முன்னெடுக்கப்பட்ட போது மஹிந்த தரப்பிற்காக தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே சகிதம் பிரச்சாரங்களினில் ஈடுபட்டிருந்தார்.எனினும் பின்னராக தென்மராட்சியின் மறவன்புலோ பகுதியினில் இராணுவப்புலனாய்வு பிரிவின் தற்கொலை அங்கிகள்; மீட்கப்பட்ட சம்பவத்தினில் சந்தேகத்தின் பேரினில் கைதாகியிருந்தார்.

எனினும் முன்னாள் போராளிகளான தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையினில் ஆளுநரது தனிப்பட்ட அதிகாரம் மூலம் முரளி விடுவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையினில் தற்போது ஆளுநரது தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிவரும் நபரே அண்மையினில் மைத்திரியின் யாழ்.வருகை மற்றும் முதலமைச்சரிற்கு ஆதரவான போராட்டங்களுடன் தொடர்புபட்டவர்களை சிக்கவைக்கும் சதியினில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

murale001

murale002