அரியாலையே சோகமயமானது!மனதை உருக்கும் சம்பவம்..

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்றைய தினம் தற்கொலை செய்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நஞ்சு அருந்திய நிலையில் தாய் மற்றும் மூன்று குழந்தைகளின் சடலங்கள் உறவினர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

வைத்தியசாலையில் நிகழ்ந்த பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளினைத் தொடர்ந்து குறித்த சடலங்கள் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை குறித்த தற்கொலைச் சம்பவம், கடன் கொடுத்ததனால் ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றத்தின் காரணமாக நிகழ்ந்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்த நிலையில் மரணமானவர்களின் இறுதிச் சடங்குகள் நாளைய தினம் அவர்களது வீட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.arejali_famile003

arejali_famile004