வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவரொன்றியம் அவசர அழைப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கட்டாயக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அதன்படி குறித்த கலந்துரையாடல் மிகவும் இக்கட்டான ஒரு சூழ் நிலையில் மேற்கொள்ளப்படவிருப்பதால் அனைத்து மக்கள் பிரதி நிதிகளினையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03-011-2017) தவறாது ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த ஒன்றுகூடலினை உதாசீனம் செய்பவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை உதாசீனம் செய்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும் மேற்படி மாணவர் ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

letter_001