கிளிநொச்சியில் கொட்டித்தீர்த்த மழை

கிளிநொச்சியில் தொடர்ச்சியாகப் பெய்த பெருமழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சியின் பல பாகங்களிலும் கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தினால் பருவப்பெயர்ச்சி ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் பெய்த கடும் மழையில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரணைமடு குளத்தில் 7 அடியாக இருந்த நீர்மட்டம் தற்பொழுது 13 அடியாக சடுதியில் உயர்வடைந்து காணப்படுகின்றது.kele_rain01

kele_rain02

kele_rain03

kele_rain04

kele_rain05