jotedem009

உங்கள் இராசிக்குப் பொருத்தமான நிறம்

சோதிடத்தில் பல வகைகள் உண்டு. அதில் முக்கியமானது குறிப்பிட்ட நிறமானது எந்த இராசிக்கு உகந்தது என்ற விடயம். எந்த இராசிகாரர்களுக்கு எந்த நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.

மேடம்

பொதுவாகத் தைரிய குணம் கொண்டவர்களாக விளங்கும் மேட இராசிகாரர்களின் இராசியை ஆளுவது செவ்வாய் கிரகம் தான். இவர்களுக்கு இரத்தச் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

இடபம்

சுக்ரன் ஆளும் இடப இராசிகாரர்களுக்கு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பான பிங்க் நிறம் அதிர்ஷ்டம் தரும். இவர்கள் சிவப்பு நிறத்தை விட்டு விலகியிருப்பது நல்லது.

மிதுனம்

மிதுனத்தை ஆளுவது புதன் கிரகமாகும். இந்த இராசிகாரர்களுக்கு பச்சை நிறம் பொதுவாக விருப்பமான நிறமாகும். இது அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

கடகம்

சந்திர கிரகம் ஆளும் கடக இராசிகாரர்கள் பொதுவாக மற்றவர்கள் மேல் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நீலம், வெள்ளை மற்றும் கடல் பச்சை இந்த வருடம் நன்மை தரும்.

சிம்மம்

சூரியன் ஆளும் சிம்ம இராசிகாரர்களுக்கு ஒரேஞ்ச் மற்றும் தங்க நிறம் அதிர்ஷ்டம் தரும். இவர்கள் முக்கியமான சந்திப்புகளுக்குப் போகும் போது தங்க ஆபரணம் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம்.

கன்னி

கன்னி இராசிகாரர்களுக்கு இளம் ஊதா மற்றும் இளமஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் தரும். வாரத்தில் புதன்கிழமை மட்டும் பச்சை நிறத்தில் உடையணிந்தால் கூடுதல் அதிர்ஷ்டம் தரும்.

துலாம்

இந்த இராசிகாரர்கள் பாதி வெள்ளையான பச்சை நிற உடையணிந்தால் நல்லது. பொதுவாக இவர்களுக்கு நீல நிறம் பெரிய அளவில் அதிர்ஷ்டம் கொடுக்கும்.

விருச்சிகம்

புதிய விடயங்களைக் கற்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்குச் சிவப்பு, ஊதா, பச்சை போன்ற நிறங்கள் அதிக அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

தனுசு

அனைத்து விடயங்களையும் சர்வ சாதாரணமாகவும், சுலபமாகவும் எடுத்து கொள்ளும் இவர்களுக்கு மஞ்சள்
நிறம் அதிக அதிர்ஷ்டம் தரும். முக்கியமாக வாரத்தில் வியாழன் கிழமைகளில் மஞ்சள் நிற உடை அணியலாம்.

மகரம்

மகர இராசிகாரர்களுக்கு சாம்பல், கருநீலம் மற்றும் நீல நிறம் நல்ல அதிர்ஷ்டத்தையும், உற்சாகத்தையும் தரும்.

கும்பம்

தைரிய குணம் கொண்ட கும்ப இராசிகாரர்களுக்கு ஊதா நிறம் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். சனிக்கிழமைகளில் கருமையான நீல நிற உடை அணிதல் நல்ல பலன் தரும்.

மீனம்

ஊதா, வெள்ளை, இள மஞ்சள் போன்ற நிறங்கள் மீன இராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அதிக சந்தோஷத்தையும் தரும்.