பல வரலாறுகளுடன் தொடர்புபடும் பழமையான வட்டுவாகல் பாலம்…

பல வரலாறுகளுடன் தொடர்புபடும் பழமையான வட்டுவாகல் பாலமானது 1951ம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்பாலம் நந்திக்கடலை கடந்து செல்வதற்காக A35 பிரதான சாலையை தொடுத்து புதுக்குடியிருப்பையும் முல்லைத்தீவையும் இணைக்கும் முகமாக கட்டப்பட்டிருக்கிறது.

யுத்தத்தின் பல அத்தியாயங்கள் எழுதப்பட்டும் பல அத்தியாயங்கள் எழுதப்படாமலும் பல இலட்சம் மக்களின் இடப்பெயர்வுகளின் புவிநிலை சாட்சியமாக பதிவாகியிருக்கிறது. 1990ம் ஆண்டுகளுக்கு முன் பல விபத்துக்கள் நிகழ்ந்திருக்கிறது.

1990 -1995ம் ஆண்டுவரையும் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சூனிய பகுதியாகவும் காணப்பட்டிருக்கிறது. 1995-2009 க்கும் இடையில் இரண்டுமுறை இராணுவ விமான குண்டு வீச்சுக்களாலும் உடைந்திருக்கிறது.

2004 ஆழிப்பேரலைகளாலும் பாதிப்படைந்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நந்திக்கடலை இந்துசமுத்திரத்துடன் கலக்கவிடுகின்ற போதும் பாலத்தின் மேலால் நீர் பாய்கிறது. அப்போது பாலம் உயரம் குறைவாக காணப்படுகிறது.

போக்குவரத்து தடைப்படும் போதெல்லாம் உடைந்த கட்டங்களின் கற்களையும் கிரவல்களையும் நிரப்பி உடனடியாக திருத்திவிடுவதில் அரச அதிகாரிகள் திறமையானவர்களாக காணப்படுகிறார்கள். இப் பாலத்துக்கு விழிம்புகளில் பாதுகாப்பு குறைவாகவே காணப்படுகிறது.

20 மீற்றருக்கு இடையிலான 2அடி உயரமும் 1அடி சதுரத்தைக்கொண்ட முட்டுக்களும் காணப்படுகிறது. பல முட்டுக்கள் அழிவடைந்திருக்கிறது. இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசினால் அதிவேக வீதிகள் உருவாக்கப்படடிருக்கிறது.

வடக்கின் வசந்தம் மக்கள் பயன்படுத்தாத வீதிகளையும் திருத்தியிருக்கிறது. பல பாலங்களை கட்டியிருக்கிறது. ஏன் வட்டுவாகல் பாலத்தை சரியானமுறையில் புனரமைக்கவில்லை.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு எட்டவில்லையா? 21/06/2016 நடந்த விபத்தில் ஒருவர் உயிர் இழந்திருக்கிறார். பல விபத்துக்கள் நிகழ்கிறது.
இதற்கு காரணம் பாதுகாப்பற்ற பாலமாக காணப்படுவதை சுட்டிக்காட்டுகிறோம்.vaduvakail_009

vaduvakail_010