பௌத்தத்தை உண்மையாகப் பின்பற்றும் நான், இலங்கைக்கு இனி செல்லவேமாட்டேன்!

புத்­த­பெ­ரு­மானின் உரு­வத்தை தனது கையில் பச்சை குத்­தி­யி­ருந்த நிலையில், இலங்­கைக்கு வரு­கை­தந்த சமயம் கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் வைத்து பிரித்­தா­னியப் பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டமை அனைவரும் அறிந்ததே.

அங்கு மிகவும் தரக்­கு­றை­வாக நடத்­தப்­பட்ட அப்பெண், தான் இனி ஒரு­போதும் இலங்­கைக்கு வரப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயோமி மைக்கல் கொல்மன் என்ற குறித்த பிரித்­தா­னியப் பெண், தனது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­ட­தாகக் கூறி தாக்கல் செய்த வழக்கில், அவ­ருக்கு 6 இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடும், 2 இலட்சம் ரூபா வழக்­கு­செ­லவுத் தொகையும் வழங்கக் கூறி உயர் நீதி ­மன்றம் அண்­மையில் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

இங்கிலாந்து பெண்­ணான கொல்மன், ஹோக்ஸ்பர் லொட்ஜ் என்ற இடத்தைச் சேர்ந்த புனர்­வாழ்வு உள­நல மருத்­துவ சேவைகள் நிறு­வ­னத்தில் தாதி­யாக பணி­பு­ரிந்து கடந்த 2014ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் திகதி, புத்­த­பெ­ரு­மானின் உரு­வத்தை தனது கையில் பச்சை குத்­தி­யி­ருந்த நிலையில், இலங்­கைக்கு வரு­கை­தந்த போது கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் வைத்து கைது­செய்­யப்­பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சட்ட மா அ­திபர், பொலிஸ் சார்ஜன்ட் உப­சேன, குரு­ணாகல் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுர­வீர, நீர்­கொ­ழும்பு சிறைச்­சாலை பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் மாஅ­திபர், குடி­வ­ரவு-குடி­ய­கல்வு திணைக்­கள கட்­டுப்­பாட்­டாளர் சூளா­னந்த டி சில்வா ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டு தனக்கு பத்து மில்­லியன் ரூபா இழப்­பீடு வழங்­கும்­படி தனது மனுவை சமர்ப்­பித்­தி­ருந்தார்.

தான் ஒரு உண்மையான, அர்ப்­ப­ணிப்­பு­ட­னான பௌத்தர் எனவும் நேபாளம், தாய்­லாந்து, கம்­போ­டியா மற்றும் இந்­தி­யாவில் தியான நிகழ்­வு­களில் தான் பங்­கு­பற்­று­வ­தா­கவும் அர்ப்­ப­ணிப்பின் ஒரு வெளிப்­பா­டா­கவே, தாமரை மலரில் அமர்ந்­துள்ள புத்­தரின் உரு­வத்தை தனது வல­து­புற மேற்­பு­ஜத்தில் பச்­சை­குத்தி உள்­ள­தா­கவும் அவரது மனுவில் தெரி­விக்­கப்­பட்­டிருந்தது.

தான் நீதி­மன்­றத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது அங்கு பொறுப்­பாக இருந்த காவலர் ஒருவர் கீழ்த்தர­மானதும் ஆபா­ச­மானதுமான பாலியல் ரீதி­யான கருத்­துக்­களையும், பாலியல் சமிக்­ஞை­களையும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வெளிப்படுத்தி தன்னைக் கேவ­லப்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர் மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

தன்­னு­டைய வழக்கு, சட்­டத்தின் எந்த ஏற்­பாட்டின் கீழ் தான் கைது செய்­யப்­பட்டு குற்­றஞ்­சாட்­டப்­பட்­டா­ர் என்பது தொடர்பாகவோ அல்லது, காவலில் வைக்­கப்­பட்டு நாடு­க­டத்­தப்­பட்­டமை குறித்தோ தனக்கு எந்­த­வித விளக்­கமும் அளிக்­கப்­ப­ட­வில்லை என தெரிவித்த அவர், சிறைச்­சாலைப் பெண்­கா­வலர் ஒருவர் பத்தாயிரம் ரூபா தன்­னிடம் கேட்­ட­தா­கவும் தன்­னு­டைய கைய­டக்கத் தொலை­பே­சியை எடுத்துச் செல்ல முயற்­சித்­த­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

தன் முழு உடம்­பையும் பெண் சிறைச்­சாலை அதி­கா­ரி­யொ­ருவர் பரி­சோ­தனை செய்­த­தா­கவும் சுமார் அறு­பது பெண் சிறைக்­கை­தி­க­ளுடன் தான் படுத்­து­றங்­கி­ய­தா­கவும் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

அண்மையில் வழங்கப்பட்ட, இழப்பீடு குறித்த தீர்ப்பையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய கொல்மன் ”இத்தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், பௌத்த மதத்தைப் பின்பற்றும் எனக்கு, இனியொருபோதும் இலங்கை வரும் எண்ணம் இல்லை” எனவும் கூறியுள்ளார்.

குறித்த சம்பவத்திற்காக, இலங்கை அரசு குறித்த தாதியப் பெண்ணிடம் சம்பவம் இடம்பெற்ற சில தினங்களிலேயே மன்னிப்புக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
uk_girl001